ராஜஸ்தானில் மிக்-21 ரக விமானம் விழுந்து விபத்து..!

Default Image

ராஜஸ்தானில் பார்மர் பகுதியில் மிக்-21 ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் பகுதியில் விமான பயிற்சி நடைபெற்று வருகிறது. பயிற்சி நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் திடீரென மிக்-21 ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.  இதனால் அப்பகுதியில் வான் நோக்கி கரும்புகை கிளம்பியுள்ளது.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே ஓடிவந்து விமானத்தில் சிக்கியிருந்த விமானியை மீட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் விமானி உயிர் தப்பியுள்ளார்.   மேலும், இந்த விமான விபத்து குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்