48 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து! 2 பேர் உயிரிழப்பு! பலர் காயம்..

சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு.

சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு.

மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் நேற்றிரவு இரவு 48 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், 16 மற்றும் 17 வயதுடைய 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். மாணவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மாணவர்கள் சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும், பேருந்து ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என தகவல் தெரிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.