அதிக போதைக்காக.. சாராயத்தில் கிருமி நாசினியை கலந்து குடித்த 8 பேர் பலி.!

ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டத்தின் குரிச்செடு என்ற கிராமத்தில் நேற்று மாலை அதிக போதைக்காக சாராயத்தில் கிருமி நாசினியை கலந்து குடித்த 8 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை 3 பேர் இறந்த நிலையில் இன்று மேலும் 6 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் மூன்று பேர் யாசகம் பெறுபவர்கள் எனவும் , 5 பேர் குரிச்செடு கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவும் என தெரியவந்துள்ளது.மேலும், 50 -க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பிரிவில் சிகிக்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்கள் மது அருந்திய இடத்தில இருந்து 8 கிருமி நாசினி பாட்டில்கள் கைப்பற்றியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“யார் துரோகி? யார் சீனியர்? ஜெ.வுக்கு எதிராக வேலை செய்தவர் ஓபிஎஸ்!” தேனியில் சீறிய இபிஎஸ்!
March 3, 2025
INDvsNZ : பேட்டிங்கில் மிரட்டிய ஷ்ரேயாஸ் ஐயர்..பந்துவீச்சில் சுருட்டிய நியூசிலாந்து! டார்கெட் இது தான்..
March 2, 2025