இலவச கேஸ் சிலிண்டர்..உஜ்வாலா திட்டத்தின் கீழ் 3 மாதம் நீட்டிப்பு.!

இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் கீழ்

இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் கீழ் மேலும் 3 மாதம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளார்.

இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் 2020 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை  ஊழியர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை 24% நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதுவரை, ஏப்ரல் மாதத்தில் சுமார் 74.3 கோடி பயனாளிகள், மே மாதத்தில் 74.75 கோடி மற்றும் 2020 ஜூன் மாதத்தில் சுமார் 64.72 கோடி ரூபாய் பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் வந்துள்ளனர்.