திருச்சூர் : தனது வழியை மறித்ததாகச் செய்தியாளர்கள் மீது அமைச்சர் சுரேஷ் கோபி திருச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மலையாள சினிமாவில், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி தைரியமாகப் புகார் அளித்து வருகிறார்கள். நடிகைகளில் அளிக்கும் புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றம்சாட்டப் பட்டவர்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் குறிப்பாக, நடிகர் முகேஷ் மீது […]
திருச்சூர் : மலையாள திரையுலகில் அதிகரித்து வரும் ‘மீடூ’ குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சுரேஷ் கோபி தனது கோபத்தை வெளிப்படுத்தினார். மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக ஹேமா குழு அளித்த அறிக்கையை அடுத்து, மலையாள திரைப்பட நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு இன்று ராஜினாமா செய்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வேண்டி முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள […]
Union Cabinet approved : உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், விவசாயத்திற்கான உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார். Read […]
தமிழகத்தில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் விளக்கப்பட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியாவுடன், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் சிறார் தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான ஏற்பாடுகள், தொற்று பாதிப்பை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் விளக்கப்பட்டது. […]
ஹஜ் யாத்திரை புறப்பாடு மையங்கள் பற்றிய முடிவு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும்,அதில் சென்னை சேர்க்கப்பட வேண்டும் என்றும் மத்திய அமைச்சருக்கு எம்பி சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு புறப்பாடு மையங்கள் 21 இல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டது. இப்பொழுதும் அதே எண்ணிக்கை என்பது பொறுத்தமல்ல எனவும்,ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் புறப்பாடு மையம் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மத்திய சிறுபான்மை நல அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அவர்களுக்கு […]
மத்திய அமைச்சராக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று பதவியேற்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக 2வது முறையாக கடந்த ஆட்சியைப் பிடித்த பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது.ஆனால்,மத்திய அமைச்சரவை முதல் முறையாக இன்று விவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து,புதிய அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றுள்ளனர்.அதில் 11 பெண்கள், 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களுக்கான பதவியேற்பு […]
மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் டிசம்பர் 5 ஆம் தேதி விவசாயிகளுடன் உரையாடல் நடத்தவுள்ளதாகவும், அதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள வேளாண சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 40 உழவர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இன்று மத்திய வேளாண் அமைச்சர் தலைமையில், விஜயன் பவனில் வைத்து உரையாடல் நடை பெற்றுள்ளது. அதில் உணவு, நுகர்வோர், விவகாரங்கள் மற்றும் பொது வினியோகத் […]
#Dshorts: மத்திய அமைச்சரும் லோக் ஜான்ஷக்தி கட்சியின் மூத்த தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வானுக்கு டெல்லி மருத்துவமனையில் நேற்று ( சனிக்கிழமை இதய அறுவை சிகிச்சை செய்பட்டுள்ளதாக அவரது மகன் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். நாட்டின் மிகவும் பிரபலமான தலித் தலைவர்களில் ஒருவரான ராம் விலாஸ் பாஸ்வான் (74) கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது மகன் சிராக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த சில நாட்களாக அப்பா மருத்துவமனையில் […]
சமீபத்தில் மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்கான மூன்று மசோதாக்களை நிறைவேற்றியது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில் குறிப்பாக பஞ்சாபில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. கடந்த மாதம் பாராளுமன்றம் நிறைவேற்றிய விவசாயம் தொடர்பான சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் பேசுவதற்கும் , அவர்களின் அச்சங்களைத் தீர்ப்பதற்கும் மத்திய அமைச்சர் ஜவடேகர் தற்போது கோவாவில் உள்ளார். இந்நிலையில், அந்த மூன்று மசோதா சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் பஞ்சாபிற்கு […]
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக டிவிட் செய்துள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக கட்கரி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும், தனது தொடர்புக்கு வந்த அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இந்நிலையில். இன்று கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், மக்கள் தங்கள் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு […]
மத்திய ‘ஜல் சக்தி’ அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத்துக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் அனுமதி. மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத்க்கு கொரோனா தொற்று உறுதி அவர் தற்போது சிகிச்சைக்காக குர்கானின் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது ட்வீட்டர் பக்கத்தில், சில அறிகுறிகளைக் கவனித்த பிறகு, நான் கொரோனா பரிசோதனை செய்தேன். சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானதால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளேன் என்றார். கடந்த சில நாட்களில் […]
மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு. மத்திய வெளியுறவு அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று கொரோனா பாசிடிவ் செய்து அகில இந்திய மருத்துவமனையில் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளை அறிந்த பிறகு நான் கொரோனா பரிசோதனை செய்தேன் முதல் சோதனை நெகடிவாக இருந்தபின் இரண்டாவது சோதனை நேற்று பாசிடிவ் என வந்தது என்று அவர் ட்வீட் செய்துள்ளார். நான் நன்றாக இருக்கிறேன் ஆனால் மருத்துவ ஆலோசனையின் பேரில் சிகிச்சையில் […]
மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கொரோனா என்று ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கொரோனா பாசிடிவ் என்று அவர் இன்று ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். அவர் ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அறிகுறிகளைக் காட்டிய பின்னர் நேற்றிரவு செய்யப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, கொரோனா வைரஸிற்கான அறிக்கையில் பாசிடிவ் என்று சவுத்ரி ட்வீட் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு […]
மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் ‘பாபி ஜி’ (பாப்பாட்) என்ற பிராண்டை தொடங்கி வைத்தார். கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்: மத்திய அமைச்சரின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் ஒரு பாப்பாட் என்ற பிராண்டை அறிமுகப்படுத்தினார். ஆத்மிர்பர் பாரத் அபியான் முயற்சியின் கீழ் தயாரிக்கப்பட்டு ‘பாபி ஜி’ பாப்பாட் எனற அப்பளம் பிராண்ட் தொடங்கப்பட்டுள்ளது. பாப்பாட் என்றால் அப்பளம் தான் அங்கு அதே ‘பாப்பாட்’ […]
இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் கீழ் மேலும் 3 மாதம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளார். இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் 2020 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை ஊழியர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை 24% நீட்டிக்க […]