2020 – 2021 மத்திய பட்ஜெட் : நாளை தாக்கல் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Default Image

இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கிய நிலையில் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். 

2020-2021-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.பின்னர் பட்ஜெட் தயாரிப்பிற்கு முன் நடக்கும் அல்வா நிகழ்வு டெல்லியில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் அல்வா வழங்கினார்.அல்வா வழங்கிய நிலையில் பட்ஜெட் ஆவணங்கள்  அச்சடிப்புப்பணி தொடங்கியது.

நேற்று  நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் திறந்த மனதுடன் விவாதிக்க தயார் என்று பேசினார்.இதையடுத்து இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது.பின்பு மக்களவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.எனவே 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை காலை 11 மணிக்கு (பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்