ஜம்மு காஷ்மீரில் கடந்த 8 மணி நேரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த 2 குண்டு வெடிப்பால் 2 பேர் காயம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் கடந்த 8 மணி நேரத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து உதம்பூர்-டிஐஜி ரியாசி ரேஞ்ச் கூறுகையில், முதலாவதாக புதன்கிழமை(செப் 29) இரவு 10.30 மணியளவில் பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் குண்டு வெடிப்பு நடந்தது என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து இன்று காலை(செப் 29) உதம்பூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக டிஐஜி மேலும் தெரிவித்தார்.
unknown node