ஜம்மு காஷ்மீரில் கடந்த 8 மணி நேரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த 2 குண்டு வெடிப்பால் 2 பேர் காயம். ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் கடந்த 8 மணி நேரத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து உதம்பூர்-டிஐஜி ரியாசி ரேஞ்ச் கூறுகையில், முதலாவதாக புதன்கிழமை(செப் 29) இரவு 10.30 மணியளவில் பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் குண்டு வெடிப்பு நடந்தது என்று கூறினார். இதனைத்தொடர்ந்து இன்று […]
ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் வெள்ளிக்கிழமை(நேற்று) நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என தகவல். ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் வெள்ளிக்கிழமை(நேற்று) நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்றும் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதி: அதனை உறுதி செய்யும் வகையில்,ஹெராட் நகரின் PD 12 இல் நடந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது, 25 பேர் காயமடைந்தனர் என […]
லூதியானா நீதிமன்றத்தில் நடந்த குண்டு வெடிப்பில் இறந்தவர் முன்னாள் போலீஸ்காரர் என பஞ்சாப் டிஜிபி தகவல். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் நேற்று 3வது தளத்தில் உள்ள கழிவறையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 5 பேர் காயமடைந்துள்ளாதாகவும் தகவல் கூறப்பட்டது. லூதியானா நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில், குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் […]
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் 3வது தளத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. லூதியானா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும், காயம் அடைந்தவர்களில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் […]
சுவீடன் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 20 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சுவீடனின் தென்மேற்கு நகரமான கோதன்பெர்க்கில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 முதல் 25 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நகரத்தின் மையப்பகுதியில் இன்று காலை 5 மணியளவில் (உள்ளூர் நேரம்) இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மேலும், இதனால் பல கட்டிடங்களில் தீ பரவி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து 100 முதல் 200 […]
பாக்தாத் : ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையம் அருகே வெடிகுண்டுகள் வெடித்ததாக ருடவ் டிவியை மேற்கோள்காட்டி ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது. இந்த குண்டு வெடிப்புகள் ட்ரோன் அல்லது ராக்கெட் தாக்குதலால் ஏற்பட்டதா என்பது தெளிவாக இல்லை என்று ருடவ் டிவி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. பின்னர், குர்திஸ்தான் பிராந்தியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு இயக்ககத்தை மேற்கோள் காட்டி, சனிக்கிழமை இரவு எர்பில் விமான நிலையத்தில் குறைந்தது ஒரு வெடிபொருள் நிரப்பப்பட்ட ட்ரோன் தாக்குதல் நடத்தியதற்கான […]
காபூல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 175 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் கடந்த மே மாத இறுதியில் இருந்து அங்கிருந்து விலகி வருகிறது. இதனால், தற்போது ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு மக்களை விமானங்கள் மூலமாக மீட்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு […]
மேல்மருவத்தூர் கோவில் மற்றும் ரயில் நிலையம் இரண்டு விரைவு ரயில்களுக்கு வெடிகுண்டு வைக்க போவதாக வந்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மேல்மருவத்தூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தபால் கடிதம் மூலமாக செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு மேல்மருவத்தூரில் வருகின்ற கன்னியாகுமரி மற்றும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிகலுக்கும், மேலும் மேல்மருவத்தூர் கோவிலுக்கும், ரயில் நிலையத்திற்கும் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பி வைத்தார். இந்த மிரட்டல் கடிதம் […]
இந்தியாவில் இருந்துகொண்டு இந்தியாவுக்கே குண்டு வைக்கும் கயவர்களுக்கு தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது.ஹைதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 44 பேர் கொல்லப்பட்டதுடன், 68 பேர் காயமடைந்தனர். 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் குற்றவாளிகள் அனீக் சயீத் மற்றும் இஸ்மாயில் சவுத்திரி ஆகியோருக்கு தூக்குதண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். மற்றொரு […]