மேற்குவங்கத்தில் முர்ஷிதாபாத் மாவட்டம் கக்மாரியிலுள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். முகாமில் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் தமிழகத்தை சார்ந்த ஒருவர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள முகாமில் சக ஊழியரை சுட்டுக் கொன்ற வீரர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இந்தியா-வங்காளதேச சர்வதேச எல்லைக்கு அருகில் அமைந்துள்ள BSF இன் முகாமின் அதிகாலையில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முர்ஷிதாபாத்தில் அமைந்துள்ள 117 பட்டாலியன் முகாமில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்கள் சத்தீஸ்கர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே சில பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு நடந்தது என கூறப்படுகிறது.