மகாராஷ்டிரா : வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 149 பேர் உயிரிழப்பு...!

Floods and landslides triggered by heavy rains in Maharashtra have left 149 people dead and 100 missing.

மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 149 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 பேர் காணாமல் போயுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரக்கூடிய மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், பல இடங்களில் இதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் பெய்து வரக்கூடிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 149 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும், 100 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.