வணிக சிலிண்டர் விலை 12.50 ரூபாய் உயர்வு.!

சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்ற , இறக்கம் சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் உள்நாட்டில் சமையல் சிலிண்டர் விலை ,மற்றும் வணிக

Gas Cylinder Rate

சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்ற , இறக்கம் சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் உள்நாட்டில் சமையல் சிலிண்டர் விலை ,மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு.! இன்றைய நிலவரம் என்ன?

ஒவ்வொரு மாதம் முதல் தேதியிலும் இந்த அறிவிப்பானது வெளியாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் தேதியில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையானது 918.50 ரூபாய்க்கு விற்பனையானது. வணிக சிலிண்டரின் விலை 1924 50 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று பிப்ரவரி 1ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே 912.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் வணிக பயன்பாடு சிலிண்டர் விலையானது 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டு 1937 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நமது நாட்டில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் அளவானது 14.20 கிலோ எடையும், வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் எடையானது 19 கிலோ எடை வரையிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பல்வேறு நிறுவனங்களால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.