முதல் நாளில் 1.9 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சகம்

1.9 lakh people were vaccinated against corona on the first day - Ministry of Health

இந்தியா முழுவதும் கொரோனாவுக்கான தடுப்பூசி இன்று தொடங்கப்ட்டுள்ளது.அவசர கால அனுமதியாக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத்பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் மற்றும்  புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நாளில் 3,352 அமர்வுகளில் மொத்தம் 1,91,181 பேருக்கு COVID-19 க்கு தடுப்பூசி போடப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.முன்னதாக இன்று மாலை 5:30 மணி வரை 1,65,714 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள முன்னணி மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குதடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் முதல் கட்டத்தில் தடுப்பூசி வழங்கப்படுகிறது.