தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்.!

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமைமை செயலர் சண்முகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமைமை செயலர் சண்முகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக தலைமை செயலர் சண்முகம் தற்போது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரன் குமார் ஜடாவத்.IAS தற்போது வேளாண் துறை துணைச்செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, கோவை மாநகராட்சி ஆணையராக குமரவேல் பாண்டியன்.IAS  நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்க்கு முன்னர், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக இருந்துவந்துள்ளார்.

unknown node

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபாகர்.IAS தற்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக ஜெயச்சந்திரன் பானு ரெட்டி.IAS நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் பழனி கோவில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.