சென்னையில் கொரோனா தொற்று எவ்வளவு.? மண்டல வாரியான விவரம்.!

சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் விவரங்களை வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் விவரங்களை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 2526 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

unknown node

இதனால் சென்னை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 176 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு அங்கு 1082 ஆக உயர்ந்துள்ளதாக  சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் தற்போது மண்டல வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் விவரங்களை சென்னை மாநகராட்சி பட்டியலை வெளியிட்டுள்ளது.