அன்பு அண்ணன் பழனிசாமி அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ட்விட் செய்த துணை முதல்வர் பன்னீர்செல்வம்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 66-வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறார். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெறிவித்துள்ளார்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில் “இன்று பிறந்தநாள் நாள் காணும், மாண்புமிகு முதல்வர் அன்பு அண்ணன் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் பல்லாண்டு வாழ எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பகிர்ந்துள்ளார்.
unknown node