ஒரே தொகுதியில் போட்டியிடும் 6 ஓ.பி.எஸ்! சின்னங்கள் ஒதுக்கீடு

OPS: ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் 6 ஓ.பி.எஸ் களுக்கும் சின்னங்களை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரோடு களத்தில் இருக்கும் மற்ற ஓ.பி.எஸ்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவரைப் போன்றே பன்னீர்செல்வம் என்ற பெயருடன் பலர் வேட்பாளர்களாக உள்ளனர். குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் … Read more

ஓ.பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு..! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு

OPS: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 25ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் அவர் மகன் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 1.77 கோடி அளவிலான சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து, சிவகங்கை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்ட நிலையில் ஓ. பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து … Read more

வெற்றி துரைசாமி மறைவு: ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரங்கல்

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி ஆற்றில் மூழ்கிய சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது. அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ ஒருங்கிணைந்த தென் சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி அவர்களுடைய மகன் வெற்றி துரைசாமி அவர்கள் பிப்ரவரி 4-ஆம் தேதி … Read more

ப்ளூ காய்ச்சல் தாக்கம்.! பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவேண்டும்.! ஓபிஎஸ் வலியுறுத்தல்.! 

தமிழகத்தில் குழந்தைகளிடையே பரவி வரும் ‘ப்ளு’ காய்ச்சல்  பரவுவதை தடுக்க புதுசேரியை போல தமிழக பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கவேண்டும் என ஓ.பன்னேர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  கொரோனாவை போல, தற்போது ப்ளூ காய்ச்சல் தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். புதுசேரியை போல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தாக்கம் சற்று அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், “ப்ளூ” வகை வைரஸ் காய்ச்சல் … Read more

அன்பு அண்ணன் பழனிசாமி அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! – துணை முதல்வர் பன்னீர்செல்வம்

அன்பு அண்ணன் பழனிசாமி அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ட்விட் செய்த துணை முதல்வர் பன்னீர்செல்வம்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 66-வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறார். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெறிவித்துள்ளார்.  துணை முதல்வர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில் “இன்று பிறந்தநாள் நாள் காணும், மாண்புமிகு முதல்வர் அன்பு அண்ணன் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் பல்லாண்டு … Read more

#SouravGanguly-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ! – ஓ.பன்னீர்செல்வம்

மாநில கிரிக்கெட் சங்க தேர்தல் முடிவடைந்த நிலையில் வருகின்ற 23-ம் தேதி பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடியும் நிலையில் பிசிசிஐ தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி வேட்பு மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் சவுரவ் கங்குலி-ஐ பிபிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக முன்னாள் பிபிசிஐ நிறுவாகி ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார். இந்நிலையில், சவுரவ் கங்குலியை அதிமுக துணை தலைவரான ஓ.பன்னீர்செல்வம் … Read more

தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை!!நலமுடன் முடியும்!!பன்னீர்செல்வம் நம்பிக்கை

அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது. தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது. … Read more