முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை சென்னையில் உயிரிழந்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில், 1998 ஆம் ஆண்டு பாமக சார்பில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இவர் சுகாதாரத்துறை இணை அமைச்சராக பணியாற்றி வந்துள்ளார்.
பின் பாமகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்த இவர், 2001 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. யாக பணியாற்றினார். 74 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை சென்னையில் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக அரசின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி, அவருடைய உடல் சொந்த ஊரான மதுராந்தகம் அருகே உள்ள இரும்பேடு கிராமத்தில் எளிய முறையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.