தமிழக பாஜக தலைவர்கள் முன்னிலையில் பாஜக-வில் இணைந்த முன்னாள் திமுக எம்.பி!

DMK MP k.p.ramalingam joins BJP in presence of Tamil Nadu BJP leaders c.t.ravi, sudhagar reddy and l.murugan

தமிழக பாஜக தலைவர்கள் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜக-வில் இணைந்த முன்னாள் திமுக எம்.பி கே.பி.ராமலிங்கம்.

திமுக-வின் முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம் தலைமைக்கு எதிராக பேசியதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இன்று சென்னைக்கு வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, கே.பி.ராமலிங்கம் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், திமுக-வின் முன்னாள் எம்.பியும், மு.க.அழகிரியின் ஆதரவாளருமான கே.பி.ராமலிங்கம், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில், பாஜகவில் இணைந்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர்கள் முன்னிலையில் பாஜக-வில் இணைந்த முன்னாள் திமுக எம்.பி!