#BREAKING: சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய நேரிடும் – நீதிபதிகள்.!

சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் ஒரு மரத்திற்கு பதில் 10 மரங்கள் நடப்படுகின்றனவா? என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் ஒரு மரத்திற்கு பதில் 10 மரங்கள் நடப்படுகின்றனவா? என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

சாலை விரிவாக்கத்திற்காக ஒரு மரம் வெட்டினால், அதற்கு பதில் 10 மரம் நட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. வெட்டப்படும் ஒரு மரத்துக்கு பதிலாக மரங்களை நடும் உத்தரவை மீறினால் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் பல ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன, அதற்கு மாற்றாக மரங்கள் நட்டப்பட்டுள்ளனவா ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 2013-இன் சுற்றுசூழல் சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி உய்ரநீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தனர். 100 கி.மீட்டருக்குள் சாலை விரிவாக்கம் மேற்கொள்ள ஒப்புதல் பெற தேவையில்லை என்பதை ரத்து செய்ய கோரி மனு அளிக்கப்பட்டது.