தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், நேற்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. .கொரோனா வைரஸ் முதலில் 50 வயதுக்கு மேற்பட்டோரைத்தான் தாக்கி வந்தது. ஆனால் தற்போது குழந்தைகள் உள்பட அனைவரையும் இந்த கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
unknown nodeநேற்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 64 பேரில் 39 ஆண்கள், 25 பெண்கள் ஆவார். தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள மொத்த பாதிப்பில் – 1,279 ஆண்கள், 606 பெண்கள் அடங்குவர்.இதில், 0-12 வயதுக்கு உட்பட்டவர்களில் 59 ஆண் , 51 பெண்களும், 13-60 வயதுக்கு உட்பட்டவர்களில் 1062 ஆண்கள், 421 பெண்ககளும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 157 ஆண்கள், 64 பெண்களும் அடங்குவார்கள்.