ராயபுரம் மண்டலத்தில் 1,400-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு.!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்தது. இதனால் மொத்தம் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை  12,448 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 4895 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் 1,423 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரம் அடுத்து கோடம்பாக்கம் மண்டலத்தில் இதுவரை 1,137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் நேற்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 7672 ஆக அதிகரித்துள்ள நிலையில், 58 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node