முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியை படம்பிடித்த கேமராமேனுக்கு கொரோனா.!

முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவதிவாளருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவதிவாளருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவடத்தில் நேற்று முன்தினம்  நடைபெற்ற  மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டார். இதே போல் நேற்று மேட்டூர் அணையை திறந்த வைத்தும் முதலமைச்சர் உரையாற்றினார்.  இந்நிலையில்,  முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்த பிலிம் டிவிசனை சேர்ந்த ஒளிப்பதிவதிவாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசு பிலிம் டிவிசனை சேர்ந்த ஒளிப்பதிவாளருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் இந்த சூழலில், பழனிசாமி மாஸ்க் அணியாமலும், தனி மனித இடைவெளியை பின்பற்றாலும் அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதாக ஏற்கனவே புகார் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.