சென்னை ஐஐடி-ல் கொரோனா தடுப்பு மையம்! மாநகராட்சி நடவடிக்கை!

சென்னை ஐஐடி- யில் உள்ள சில மாணவர் விடுதிகளை கொரோனா தடுப்பு மையமாக மாற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை.

சென்னை ஐஐடி- யில் உள்ள சில மாணவர் விடுதிகளை கொரோனா தடுப்பு மையமாக மாற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், சென்னையில், பள்ளிகள் கல்லூரிகளில் கொரோனா தடுப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில், தற்போது ஐஐடி யில் உள்ள சில மாணவர் விடுதிகளை கொரோனா தடுப்பு மையமாக மாற்ற சென்னை மாநகராட்சி ஐஐடி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது .

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் ஊழியர்கள், பேராசிரியர்களுக்கான குடியிருப்பு வளாகங்கள் உள்ள நிலையில், அங்குள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.