தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 74,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 1,358 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை கொரோனாவில் இருந்து 41,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,956 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49, 690 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.