#BREAKING: தமிழகத்தில் முதல் முறையாக 1,927 பேருக்கு தொற்று.!

தமிழகத்தில் இதுவரை  36, 841 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை  36, 841 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 1,927 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 36, 841 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,392 பேருக்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25, 937 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1008 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 19,333 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 19 பேர் உயிரிழப்பு, மொத்த எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 17,179 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று பாதிக்கப்பட்ட  1,685 பேரில் 30 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.