வேளாண் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது பாஜக அரசு – ஸ்டாலின் பேச்சு!

Stalin, the DMK leader on the battlefield, said that it was the BJP government that passed the agriculture law in a hurry.

அவசர அவசரமாக வேளாண் சட்டத்தை நிறைவேற்றியது பாஜக அரசுதான் என இன்று சேலத்தில் நடைபெறும் போராட்டக்களத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.

அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச விவசாயிகள் தொடர்ந்து 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகளின் ஆதரவு அதிகமாகவே உள்ளது. மேலும் போராடக்கூடிய விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரக்கூடிய விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மாநிலம் முழுவதும் திமுக சார்பில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றுவருகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் பங்கேற்றுள்ளார். சேலத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது .இந்தப் போராட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற கூடாது என அதிமுக அரசு செயல்படுவதாகவும், வேளாண் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது பாஜக அரசுதான் எனவும் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது பாஜக அரசு – ஸ்டாலின் பேச்சு!