மோடி பிரதமராக பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவு பெரும் தினத்தை ‘கருப்பு தினமாக’ அனுசரிக்க டெல்லியில் போராடும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கடந்த நவம்பர் மாதத்திலிருந்து தற்போது வரை டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.இதற்காக,டெல்லி எல்லையில் தங்கி 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து,வருகின்ற மே 26 ஆம் தேதியுடன் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கி 6 […]
விவசாயிகளின் போராட்டம் ஓய்ந்து விட்டது எனவும், இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்து விடும் எனவும் நினைத்துவிட வேண்டாம் என விவசாய அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகப் போராடி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் வித்தியாசமான போராட்டங்களை கையிலெடுத்து போராட்டங்களை வலுப்படுத்தும் முயற்சியில் தான் விவசாயிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஒத்துப்போவதாக தெரியவில்லை. இந்நிலையில் இதுகுறித்து விவசாயிகள் அமைப்பாகிய சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பின் […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்க்கும் பட்சத்தில் மத்திய அரசு அந்த புதிய சட்டங்களை திரும்பப் பெற வேண்டியது தானே என பிரியங்கா காந்தி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் வேளாண் திட்டங்கள் மூலமாக நன்மை அடைவார்கள் என […]
கனடா பிரதமர் ஜஸ்டின் உடன் தொலைபேசியில் ஆலோசனை பேசிய பிரதமர் மோடி விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டம் தொடர்பாக பல்வேறு நாட்டின் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், விவசாயிகளின் அமைதியான இந்த போராட்டத்திற்கு கனடா எப்பொழுதுமே ஆதரவளிக்கும் எனவும், விவசாயிகளின் போராட்டம் […]
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக வருகின்ற 18 ஆம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவிப்பு. டெல்லியில் ஹரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக யோசித்து பல விதமான வழிகளில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து […]
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு சர்வதேச சமூக ஆர்வலர் கிரேட்டா மற்றும் அமெரிக்க பாப் பாடகி ரிஹானா ஆகியோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வபோது கலவரங்களாக மாறி வரும் இந்த போராட்டங்களுக்கு தற்போது பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்க படும் […]
சுவர்களை உருவாக்காமல், பாலங்களை உருவாக்குங்கள் என்று இந்திய அரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுக்கும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் சுலபமான முடிவு எட்டப்படவில்லை. அனைத்தும் தோல்விலேயே முடிவடைந்தது. இதனிடையே, குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் டெல்லி காவல்துறைக்கும், விவசாயிகளுக்கு […]
ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயல வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில், இன்று டிராக்டர் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர். சிங்கு, டிக்ரி எல்லை வழியாக போலீசாரின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லிக்கு நுழைய முயன்றனர்.அப்போது ஒரு சில விவசாயிகள் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதாகவும்,அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.இதனால் விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் […]
விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது டெல்லியின் டிடியு மார்க்கில் உள்ள பகுதியில் டிராக்டர் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். விவசாயிகள் 62-வது நாளான இன்று டிராக்டர் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர். சிங்கு, டிக்ரி எல்லை வழியாக போலீசாரின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லிக்கு நுழைய முயன்றனர்.அப்போது ஒரு சில விவசாயிகள் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதாகவும்,அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.இதனால் விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.டிராக்டர் பேரணியில் […]
அதிகாரத்தில் இருப்பவர்களின் இரக்கமற்ற செயலால் விவசாயிகள் பலர் உயிரிழக்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா அவர்கள் கூறியுள்ளார். மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் நாடு தழுவிய போராட்டத்தின் ஒருபகுதியாக தற்பொழுது காங்கிரஸில் உள்ள தொழிலாளர்களும் காங்கிரஸ் தலைவர்களும் பலர் பஞ்சாப் ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேச தலைவர்களுடன் இணைந்து அணிவகுப்புகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட பல காங்கிரஸ் தலைவர்கள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். […]
வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக வரும் 30 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 33 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அரசு 5 […]
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக பஞ்சாபி கவிஞர் சுர்ஜித் பாட்டர் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி தொடர்ந்து 12வது நாளாக பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகள் மத்திய அரசுடன் 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும், பலன் இல்லை. வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து […]
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிடில் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி ஒப்படைப்பேன் என்று குத்துசண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில், சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேச விவசாயிகள் தொடர்ந்து 11வது நாளாக கடும் குளிரை கூட பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், 5 கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாயிகள் சங்க தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கூட சுமுகமான தீர்வு கிடைக்கவில்லை. இதில் பல்வேறு […]
விவசாயிகளின் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஏற்கனவே கூறிய கருத்துக்கு இந்தியா எச்சரிப்பு கொடுத்திருந்த நிலையில், மீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைதியான போராட்டங்களுக்கு தன் எப்பொழுதுமே துணை நிற்பேன் என கருத்து தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் போராட்டத்திற்கு இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஆதரவு அதிகமாக இருந்தாலும், வெளிநாட்டிலிருந்து ஆதரித்த ஒரே பிரதமர் என்றால் அது கனடா பிரதமர் […]
அவசர அவசரமாக வேளாண் சட்டத்தை நிறைவேற்றியது பாஜக அரசுதான் என இன்று சேலத்தில் நடைபெறும் போராட்டக்களத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச விவசாயிகள் தொடர்ந்து 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகளின் ஆதரவு அதிகமாகவே உள்ளது. மேலும் போராடக்கூடிய விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கருப்புக்கொடி […]