#BREAKING: ஒரே நாளில் மேலும் 5,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

தமிழகத்தில் புதிதாக 5,986 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 5,986 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,986 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, மொத்தமாக 3,61,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,175 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1,21,450 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75,076 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 39.88 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரசால் இன்று 116 பேர் பலியாகியுள்ளனர். அதில், 44 பேர் தனியார் மருத்துவமனையிலும், 72 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,239 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 5,742 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,01,913 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

unknown node