போலி இ-பாஸ் மூலம் சென்றதற்காக 58 வாகனங்கள் பறிமுதல் – ஏ.கே.விஸ்வநாதன்

போலி இ-பாஸ் மூலம் சென்றதற்காக 58 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

போலி இ-பாஸ் மூலம் சென்றதற்காக 58 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு  தளர்வில்லாத ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு உள்ளது.

முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக 23,704 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி இ-பாஸ் மூலம் சென்றதற்காக 58 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இ-பாஸ் தவறாக பயன்படுத்தக் கூடாது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு வரும் நபர்களை அடிக்கக் கூடாது  என்று தெரிவித்துள்ளார்.