போலி இ-பாஸ் மூலம் சென்றதற்காக 58 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு தளர்வில்லாத ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு உள்ளது. முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக 23,704 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி இ-பாஸ் மூலம் சென்றதற்காக 58 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இ-பாஸ் தவறாக பயன்படுத்தக் கூடாது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு […]
சமூக இடைவெளியை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், சென்னையில் மிக கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படும். அறிவுரை சொல்லி அனுப்பியதால் கடந்த முறை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சென்னை நகருக்குள் மட்டும் 288 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். சென்னைக்கு வெளியே தினசரி வேலைக்கு சென்று […]
சமூக இடைவெளியை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனவே சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலாகிறது. இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலாகும் போது, கண்காணிப்பை தீவிரப்படுத்த […]
கோயம்பேடு சந்தை இடமாற்றம் குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்பதால் மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது . சென்னை, கோவை ,மதுரை,திருப்பூர்,சேலம் மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.எனவே இதற்கு முன் கோயம்பேடு சந்தையில் அதிகமான மக்கள் வந்து காய்கறிகள் வாங்கினர்.இதனால் தனிநபர் இடைவெளி பின்பற்றப் படாமல் இருந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன் விளைவாக தான் கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது .இதனால்தான் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் ஏ.கே. […]
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அண்ணா மேம்பாலத்தில் இருந்து 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர் .இதன் பின்னர் வெடிகுண்டு வெடித்த இடத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் விசாரணை மேற்கொண்டார்.
போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் வசூலிக்க நவீன இ-சலான் வசதியை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 352 போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கு இ- சலான் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதத்தை நேரடியாக கார்டுகளை பயன்படுத்தி ஸ்வைப் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த இயந்திரத்தில் வாகனம் மற்றும் ஓட்டுனர்களின் முழு விவரங்கள் அடங்கி இருக்கும். இதன் பின்னர் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசுகையில், சாலை விதிகளை வாகன ஓட்டிகள் […]
சென்னையில் பொங்கல் பண்டிகைக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறுகையில், சென்னையில் பொங்கல் பண்டிகைக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காணும் பொங்கல் பண்டிகைக்கு சென்னை மெரினா கடற்கரையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.