நாளின் தொடக்கத்தை ஏன் பாலுடன் தொடங்கக்கூடாது? பாலின் பக்க விளைவுகளை பற்றி ஆயுர்வேதம் விளக்குகிறது.
குழந்தைக்குக் கொடுக்கப்படும் முதல் உணவு பால், அது முதல் ஊட்டச்சத்தின் இன்றியமையாத பகுதியாக மாறுகிறது.
இருப்பினும், உங்கள் நாளை நீங்கள் பாலுடன் தொடங்கலாமா? கூடாதா? அதை சாப்பிட சரியான நேரம் எது? போன்றவற்றை பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.
உங்கள் நாளை பாலுடன் தொடங்குவது நல்லதா?
பெரும்பாலான மக்கள் பாலுடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள்.
மேலும் அதை தினமும் உட்கொள்வதால் சந்தேகத்திற்கு இடமின்றி அன்றைய நாளுக்கு ஒரு சரியான தொடக்கத்தை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் பெரும்பாலான நிபுணர்கள் இது குறித்து மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
ஆயுர்வேதத்தின்படி,
பால் உட்கொள்வதை விட, உங்கள் காலைப்பொழுதை லேசாக உணவுகளை உட்கொண்டு தொடங்குவது நல்லது.
வெறும் வயிற்றில் பால் குடிப்பது நல்லதை விட தீங்கு விளைவிக்கும்.
மேலும் இது உடலின் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது மற்றும் தெளிவான சருமத்திற்கு பயனளிக்காது எனக் கூறப்படுகிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி,
செரிமான அமைப்பில் ஒரு கனமான பணியைச் செயல்படுத்துவது நல்ல யோசனையல்ல, ஏனெனில் கனமான உணவை ஜீரணிக்க நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் மற்றும் வயிற்று வலி ஏற்படக்கூடும்.
வெறும் வயிற்றில் பால் குடிப்பதால் இரைப்பை பிரச்சனைகள், அமிலத்தன்மை, வீக்கம், வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பால் குடிக்க சிறந்த நேரம் எது?
ஆயுர்வேதத்தின் படி, பால் குடிக்க சிறந்த நேரம் மாலை ஆகும்.
ஏனெனில் நீங்கள் ஓய்வெடுக்கும்போது, உங்கள் உடலைப் புத்துணர்ச்சியடையச் செய்ய இது உதவுகிறது.
காலை வேளையில் பால் குடிப்பதால் உடல் எடை கூடும் என்றும், மாலையில் குடிப்பதால் தூக்கம் மற்றும் நரம்பு தளர்வு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.