கோதுமை இருந்தா போதும்... மாலை நேரத்தில் அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெடி!

If you have a cup of wheat flour at home you can prepare gorgeous snacks. Come see how it is done.

மாலை நேரம் ஆனாலே குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என  விரும்புவது வழக்கம். இதற்காக நாம் கடையில் எப்பொழுதும் பணத்தை கொடுத்து வடை, முறுக்கு வாங்கி விடுவோம். இனிமேல் பணத்தைக் கொடுத்து வீணாக்காதீர்கள். வீட்டிலேயே ஒரு கப் கோதுமை மாவு இருந்தால் அட்டகாசமான ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம். எப்படி செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு

உப்பு

மிளகாய்த்தூள்

சீரகத்தூள்

எண்ணெய்

கருவேப்பிலை

செய்முறை

முதலில் கோதுமை மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு இதனுடன் மிளகாய்த் தூள், சீரகத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி வைத்துக் கொள்ளவும். பின்பு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும். சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் வரை பிசையவும்.

கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தேவையானவர்கள் சேர்த்துக்கொள்ளலாம். அதன் பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அவற்றை சப்பாத்திக் கல்லில் வைத்து தட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன்பின் அழகுக்காக முள் கரண்டி வைத்து ஆங்காங்கு புள்ளிகள் போட்டு வைத்துக் கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் நாம் தட்டி வைத்துள்ள மாவை போட்டு பொரித்தெடுத்தால் அட்டகாசமான ஸ்நாக்ஸ் தயார்.