பூரி மசாலா-ஹோட்டல் ஸ்டைலில் பூரி மசாலா செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்;
உருளைக்கிழங்கு =4 மீடியம் சைஸ்
வெங்காயம் =4
பச்சை மிளகாய் =ஐந்து
பொட்டுக்கடலை= 6 ஸ்பூன்
எண்ணெய் = நான்கு ஸ்பூன்
சோம்பு= ஒரு ஸ்பூன்
கடுகு= ஒரு ஸ்பூன்
உளுந்து =ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள்= ஒரு ஸ்பூன்.
unknown nodeசெய்முறை;
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து மசிந்து வைத்துக் கொள்ளவும். பிறகு வெங்காயத்தை நீள்வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும் .ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்து ,சோம்பு ,கருவேப்பிலை சேர்த்து தாளித்து பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும் .
unknown nodeபிறகு பொட்டுக்கடலையை மிக்ஸியில் முதலில் பொடி செய்து கொள்ளவும். பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து வெங்காயத்துடன் சேர்த்து கலந்து விடவும்.இதற்கு பதில் சோள மாவும் சேர்த்து கொள்ளலாம் . இப்போது உருளைக்கிழங்கையும் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு கெட்டியாகும் வரை கொதிக்க வைத்த இறக்கினால் ஹோட்டல் சுவையில் பூரி கிழங்கு மசாலா தயார்.
