சென்னை :இந்திய ரயில்வே வாரியம் 1376 பாரா மெடிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் RRB பாரா மெடிக்கல் 2024 அறிவிப்பை கவனமாகப் படித்துவிட்டு, தகுதியை உறுதி செய்ய வேண்டும்.
பின்னர், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்https://www.rrbchennai.gov.in/என்ற இணையதளத்தில் வருகின்ற 17.08.2024 முதல் 16.09.2024 வரை விண்ணப்பிக்கலாம். இந்த காலி பணியிடங்களுக்கு அனைத்து மாநிலங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள். மேலே குறிப்பிட்ட படி, சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவில், மட்டும் 143 காலிப்பணியிடங்கள் உள்ளது.
காலியிடங்கள்
Dietician (Level 7)
5
Nursing Superintendent
713
Audiologist & Speech Therapist
4
Clinical Psychologist
7
Dental Hygienist
3
Dialysis Technician
2
Health & Malaria Inspector Gr III
126
Laboratory Superintendent
27
Perfusionist
2
Physiotherapist Grade II
20
Occupational Therapist
2
Cath Laboratory Technician
2
Pharmacist (Entry Grade)
246
Radiographer X-Ray Technician
64
Speech Therapist
1
Cardiac Technician
4
Optometrist
4
ECG Technician
13
Laboratory Assistant Grade II
94
Field Worker
19
கல்வி தகுதி
நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிகளுக்கு ஏற்ப சம்மந்தபட்ட துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு :43 ஆண்டுகள்
சம்பளம்
ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.(அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப மாறுபடும், விரிவான விவரம் அறிவிப்பில் உள்ளது)
கட்டணம்
எஸ்ஐ எண்.2 இல் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கட்டணச் சலுகை வகைகளைத் தவிர அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்: ரூ.500 வசூலிக்கப்படுகிறது. ஆனால் (இந்த கட்டணம் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வில் கலந்து கொள்ளும் போது வங்கிக் கட்டணங்களை முறையாகக் கழித்துக் கொண்டு திருப்பித் தரப்படும்).
SC/ST/ பெண்/முன்னாள்கள்/ சிறுபான்மையினர்/ பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.250 வசூலிக்கப்படுகிறது. ஆனால் (இந்த கட்டணம் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வில் கலந்து கொள்ளும் போது வங்கிக் கட்டணங்களை முறையாகக் கழிப்பதன் மூலம் திருப்பித் தரப்படும்).
தேர்வு செயல்முறை:
கணினி அடிப்படையிலான சோதனை,
ஆவண சரிபார்ப்பு
மருத்துவ பரிசோதனை
இவ்வாறு 3 விதமான முறையில் தேர்வு முறை நடந்து இறுதியில் தேர்வுசெய்யப்படும்.
முக்கிய நாட்கள்
விண்ணப்பம் தொடங்கிய தேதி
17.08.2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி
16.09.2024
முக்கிய விவரம்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
க்ளிக்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
க்ளிக்
