#Breaking:கனமழை எதிரொலி:4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

Schools in four districts, including Ramanathapuram, will be closed today due to heavy rains.

ராமநாதபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.மேலும்,வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளதன் காரணமாக இன்று (நவம்பர் 25 ஆம் தேதி) முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அந்த வகையில்,இன்று தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.இதன்காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியான வண்ணமுள்ளது.

அதன்படி,கனமழை காரணமாக மயிலாடுதுறை,புதுக்கோட்டை,திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில்,ராமநாதபுரம் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.இதனால், தமிழகத்தில் இதுவரை 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.