நீலகிரி : வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும், இதனால் நீலகிரியிலும் கடந்த சில நாட்களாக நல்ல மழை கொட்டித் தீர்த்தது. அதிலும், நேற்று முழுவதும் நல்ல மழை பெய்ததன் காரணமாக ஒரு சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு நீலகிரி குன்னூர் தாலுகாவில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், மழையின் தீவிரத்தை புரிந்து கொண்டு அதன் முன்னேற்பாடாக […]
தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய மாலத்தீவு கடற்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக எச்சரிக்கை விடுத்தது. விடாது பெய்த கனமழை..! நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.! அதே போல இன்று அதிகாலையிலேயே நெல்லை, தூத்துக்குடி , தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. கனமழையை தொடர்ந்து முன்னதாக திருநெல்வேலி […]
மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் நீலகிரி,கோவை,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்,தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை,குந்தா,கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கி அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி:கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டம் (தாலுகா) மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (02.12.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் அந்தமானில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக,தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 25-ஆம் தேதி பெய்த கனமழையில் பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.அந்த வகையில், தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர், காயல்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு […]
கனமழை காரணமாக இன்று கீழ்க்கண்ட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.மேலும்,சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பள்ளிகள்,கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், பல மாவட்டங்களில் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில்,கனமழை […]
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருவதாலும்,மழை பாதிப்புகளை கருத்தில்கொண்டும் திருபத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, மொத்தம் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, நெல்லை, குமரி,நாகை, மயிலாடுதுறை,விழுப்புரம்,திருவாரூர், கள்ளக்குறிச்சி,கடலூர், விருதுநகர்,தென்காசி,தேனி,திண்டுக்கல்,திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு […]
ஏற்கனவே 23 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தருமபுரி,பெரம்பலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால்,பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னதாக,பெரம்பலூர் மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு வரை […]
தமிழகம்:கனமழை காரணமாக கீழ்கண்ட மாவட்டங்களில் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும்,கன்னியாக்குமரி மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதன் காரணமாக தமிழகத்தில் 28 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல மாவட்டங்களில் கனமழை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால்,பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 12 மாவட்டங்களில் பள்ளி, […]
கனமழை காரணமாக தூத்துக்குடி,நெல்லை ஆகிய மாவட்டங்களில் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.அதன்படி,தற்போது தூத்துக்குடி,நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்,தூத்துக்குடி,நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று மதியம் மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ராமநாதபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.மேலும்,வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளதன் காரணமாக இன்று (நவம்பர் 25 ஆம் தேதி) முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில்,இன்று தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.இதன்காரணமாக […]
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியான வண்ணமுள்ளது. இந்நிலையில்,கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக,ஏற்கனவே புதுக்கோட்டை,திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மழை காரணமாக கீழ்க்கண்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில்,வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளதன் காரணமாக இன்று (நவம்பர் 25 ஆம் தேதி) முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழை […]
காஞ்சிபுரத்தில் 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையினால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.இதன்காரணமாக, சாலைகள்,பள்ளிகள் என பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது.இதனால்,மழை பாதிப்பை பொறுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில்,மழைநீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்டத்தில் முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அறிவித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு […]
தமிழகம்:மழைநீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக கீழ்க்காணும் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்,தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில்,அண்மையில் பெய்த கனமழையால் சென்னை,காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகள்,சாலைகள் என பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இதனால்,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,மழைநீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத்தில் உள்ள […]
சத்திஸ்கர், பிஹாரில் கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகளுக்கு வருகிற மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் திரையரங்கள் மூடப்படுகிறது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் காலவரம்பின்றி பள்ளிகள் மூடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பே கேரளா மாநிலம் மார்ச் 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தத நிலையில், தற்போது மேலும் சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு […]
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,14,343 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் 60,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 56 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானாவர்களின் எண்ணிக்கை 12 என்றும் 1,116 பேர் கண்காணிப்பில் உள்ளனர் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வைரஸ் வேகமாக […]