இன்று முதல் பள்ளிகள் திறப்பு -செய்ய வேண்டியவை என்ன ?

Schools are to be opened for the 10 th standard and twelth standard students in Tamil Nadu today after long time

தமிழகத்தில் இன்று முதல் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஒரு வருட காலமாக  பள்ளிகள் மூடப்பட்டு இருந்து. ஆகவே பள்ளிகள் திறப்பது குறித்து பல கட்டமாக ஆலோசனைகள் நடைபெற்று வந்தது. பொது தேர்வு நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வந்த நிலையில், அண்மையில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ,வீட்டில் ஆன்லைன் மூலம் படிக்க விரும்பும் மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.  பள்ளிக்கு மாணவர்கள் வர வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது எனவும், பெற்றோர்களின் விருப்பப்படி ,ஒப்புதல் கடிதம் பெற்ற மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் எனவும் பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றை எப்பொழுதம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் போன்ற பாதுகாப்பு வழிகாட்டுதலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.