உடனே விண்ணப்பிங்க...மாணவர் சேர்க்கை;ஜூலை 7-ஆம் தேதி கடைசி நாள் – உயர்கல்வித்துறை அறிவிப்பு!

அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவிப்பு.

அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவிப்பு.

தமிழகத்தில் 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில்,தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி மாற்றம் செய்து உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று (ஜூன் 22-ம் தேதி) முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

அதன்படி,www.tngasa.orgஎன்ற இணையதள முகவரியில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஜூலை 7-ஆம் தேதி கடைசி நாளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக,அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 27-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது இன்று முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனே விண்ணப்பிங்க...மாணவர் சேர்க்கை;ஜூலை 7-ஆம் தேதி கடைசி நாள் – உயர்கல்வித்துறை அறிவிப்பு!