கொரோனா காலத்தில் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளனர் என நீதிபதி கருத்து. உயர்கல்வி படிக்க இளநிலை MBBS சான்றுகளை வழங்க வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்குனருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இளநிலை மருத்துவ சான்றை வழங்க கோரி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இளநிலை கல்வி பயிலும் போது கொரோனா காலத்தில் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளனர் என நீதிபதி […]
கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி கல்விச் சான்றிதழ் அளித்து பணிபுரிந்து வந்த அலுவலக உதவியாளர் சஸ்பெண்ட். ராசிபுரத்தில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் முறையாக அனுமதி பெறாமல் மரங்களை வெட்டி குறைந்த விலைக்கு விற்ற புகாரில் கல்லூரி முதல்வர் எஸ்.பங்காரு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று, அரியலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 8ம் வகுப்பு படித்ததாக போலி கல்விச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்து 25 ஆண்டுகளாக வேலை பார்த்த அலுவலக உதவியாளர் ஜெயராமன் (57) […]
கூடுதலாக 1,895 கவுரவ பேராசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு. 2022-23ம் கல்வியாண்டில் கூடுதலாக 1,895 கவுரவ பேராசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கி உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அரசு கல்லூரிகளில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் எனவும் அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். இந்த நிலையில், 2022-23ம் கல்வியாண்டில் கூடுதலாக 1,895 கவுரவ பேராசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேச்சு, அரசு கல்லூரிகளில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என அறிவித்தார். இதன்பின் பேசிய அவர், பொறியியல் முதலாமாண்டு சேர்க்கை நவம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறும். அதன்படி, அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார். […]
உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கடிதம். தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களில் 6,718 பேர் வறுமை, குடும்ப சூழல், நிதி பற்றாக்குறை, உயர் படிப்பில் சேர ஆர்வமின்மை, தொழில் செய்தல், அருகாமை கல்லூரி இல்லாமை போன்ற காரணங்களால் உயர்கல்வியைத் தொடரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. iஇதன் காரணமாக மாணவர்கள் உயர்கல்வி தொடங்குவதற்கு ஏதுவாக வரும் 20-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை […]
பொறியியல் படிப்புக்கான 3வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 13ம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. வரும் 13ம் தேதி 3-வது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளது. பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 5ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தார். மேலும், 8ம் தேதி கலந்தாய்வு ஒரே கட்டமாக நடைபெறும் […]
உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத ஒவ்வொரு மாணவரையும் தொடர்புகொண்டு வழிகாட்டுதல்கள் வழங்க பள்ளிகவித்துறை திட்டம். பிளஸ் 2 முடித்து 8,588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை என்பதால், உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 2021-2022-ம் கல்வியாண்டில் அரசு & உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு முடித்த 79,762 பேரில் 8,588 பேர் எவ்வித உயர்கல்வி படிப்புகளிலும் சேரவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மாணவர்களை ஒவ்வொருவராக தனித்தனியே […]
கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து. மாணவர்களுக்கு கல்வி அரசால் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. அமெரிக்கா போன்று வளர்ந்த நாடுகளில் திறமை அடிப்படையில் முழு கல்வி செலவையும் அரசே ஏற்கிறது என நீதிபதி மகாதேவன் கருத்து கூறியுள்ளார். கல்வி பயிலும் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் காத்து கிடக்கும் சூழ்நிலை நிலவுகிறது. கல்வி நிலையம் வைத்து நடத்தும் முதலாளிகள் பிஎம்டபிள்யூ […]
தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. புதிய கல்விக் கொள்கையை எதற்காக எதிர்க்கிறோம் என மத்திய கல்வி அமைச்சருக்கு எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளோம். கல்வித்துறை இணையமைச்சர் என்பதால், சுபாஸ் சர்க்காருக்கு தமிழ்நாட்டின் எதிர்ப்பு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழக அரசு சார்பில் புதிய கல்வி கொள்கை விரைவில் வெளியாகவுள்ளது என தெரிவித்தார். இதன்பின் பேசிய அவர், […]
ஐஐடி, ஐஐஎம்-க்களில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்பது தொடர்பாக அரசாணை வெளியீடு. தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியிலேயே பயின்ற மாணவ மாணவிகள் IIT, IIM, AIIMS-களில் சேர்ந்தால் அதன் கல்விக் கட்டணத்தை தமிழக அரசே ஏற்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில், 2022-23 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ் […]
மாணவிகளின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 7-ஆம் தேதி ரூ.1000 வழங்க தமிழக அரசு முடிவு. கடந்த தமிழக சட்டப்பேரவையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’, `மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்’ என்று மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு வங்கிக் கணக்கில் மாதம் தோறும் ரூ.1000 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அரசுப் பள்ளியில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு […]
பொறியியல் கலந்தாய்வு 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கலந்தாய்வு தொடங்கும் தேதி தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. நீட் தேர்வு முடிவு வெளியான பின் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டது. விரைவில் புதிய பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியாகும் என தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் […]
நீட் தேர்வு முடிவு வெளியான பின் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டம். ஆகஸ்ட் 16 முதல் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கலந்தாய்வு தொடங்கும் தேதி தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நீட் தேர்வு முடிவு வெளியான பின் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நீட் முடிவுக்கு பின் பல மாணவர்கள் கல்லூரிகளை விட்டு வெளியேறலாம் என்பதால் கலந்தாய்வு தள்ளி போகிறது. எனவே, விரைவில் […]
தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு. தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றி வரும் 4,681 பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்யப்படுகிறது என உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. கல்வியியல், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 4,681 தற்காலிக பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊதியம் மற்றும் பிற படிகள் வழங்க ஏதுவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு […]
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு என உயர்கல்வித்துறை அறிவிப்பு. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை இணையத்தில் வெளியிடப்பட்டது. சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in மற்றும் results.cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு CBSE 12ம் வகுப்பு தேர்வில் 92.71% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை […]
பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் சர்ச்சை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை நிச்சயம். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதுகலை தேர்வில் வினாத்தாளில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலரும் கண்டங்களை தெரிவித்தனர். இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் சர்ச்சை விவகாரத்தில் தவறிழைத்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் உயர்கல்வித்துறை உறுதி அளித்துள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் […]
ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவியரின் விவரங்களை வரும் 30-ம் தேதிக்குள் உள்ளீடு செய்ய உத்தரவு. அரசுப் பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவியரின் விவரங்களை http://penkalvi.tn.gov.in இணையதளத்தில் வரும் 30-ம் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கும் பயன்பெறும் மாணவியர்களின் விவரங்களை இன்று முதல் […]
தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை சென்னையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை நேரு விளையாட்டு அரங்கத்தில் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரிவு வாரியான பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு, கல்லூரிகளை […]
கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணச்சந்திரனை நியமித்தது செல்லாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, ஊட்டி அரசுக் கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி, கல்லூரிக் கல்வி இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவிப்பு. தமிழகத்தில் 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில்,தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி மாற்றம் செய்து உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று (ஜூன் 22-ம் தேதி) முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். அதன்படி,www.tngasa.org என்ற […]