#BREAKING: மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது! உபரி நீர் திறப்பு!

மேட்டூர் அணை நீர்மட்டம் 42வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரி நீர் திறப்பு.

மேட்டூர் அணை நீர்மட்டம் 42வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரி நீர் திறப்பு.

சேலம்: தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் மேட்டூர் அணை வரலாற்றில் 42-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது நீர்மட்டம். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழையால் 4 நாட்களில் அணை நீர்மட்டம் 20 அடி வரை உயர்ந்தது.

முதல் கட்டமாக 16 கண் மதகு வழியாக 25,000 கன அடியும், நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 25,000 கன அடியும் திறக்கப்படுகிறது. முழு கொள்ளளவை எட்டியதால் கடந்த 8 மாதங்களில் 2 வது முறையாக 16 கண் மதகுகள் வழியே உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பால் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.