மேட்டூர் அணை நீர்மட்டம் 42வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரி நீர் திறப்பு. சேலம்: தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் மேட்டூர் அணை வரலாற்றில் 42-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது நீர்மட்டம். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழையால் 4 நாட்களில் அணை நீர்மட்டம் 20 அடி வரை உயர்ந்தது. முதல் கட்டமாக 16 கண் மதகு வழியாக 25,000 கன அடியும், […]
நடப்பாண்டில் 4வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100அடியை எட்டியது. “நிவர்” புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்திருந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதன் விளைவால் நீர் நிலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்றயை காலை நிலவரப்படி, நீர் இருப்பு 64.84 டி.எம்.சி,யாக உள்ளது. இன்று காலை 11 […]
20 ஆயிரம் கண அடியிலிருந்து 15 ஆயிரமாக சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம். கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மழை அதிகமாக பெய்து வந்ததால் அணைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது. மேட்டூர் அணையில் வினாடிக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான கனஅடியும் நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 20,298 கன அடியிலிருந்து 15,124 கன அடியாக சரிந்துள்ளது. மேலும் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.42 அடியாகவும், […]
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றய நிலவரப்படி 98.46 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 62.86 டி.எம்.சி. ஆகவும் இருக்கிறது. மேலும், அணையிலிருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 18,000 கன அடி தண்ணீர் திறக்கப்ட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,160 கன அடியில் இருந்து 14,525 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது, மேட்டூர் அணை நீர்மட்டம் 98.15 அடியாகவும், நீர் இருப்பு 62.46 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.
ஒக்கேனக்கல் நீர்வரத்து குறைந்தது. பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அங்கங்கு எல்லா இடங்களிலும் அணைகள் நிறைந்து வழிக்கிறது. மேலும் அணைகளுக்கு வரும் நீர்வரத்தின் அளவும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஒகேனக்கலுக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 20,000 கன அடியாக சரிந்துள்ளது. காலையில் ஒரு லட்சத்து 35,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 15,000 கன அடி குறைந்துள்ளது.