ஓரே ஆண்டில் 4வது முறையாக மேட்டூர் அணை 100அடியை எட்டியது .!

Default Image
நடப்பாண்டில் 4வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100அடியை எட்டியது.

“நிவர்” புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்திருந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதன் விளைவால் நீர் நிலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்றயை காலை நிலவரப்படி,  நீர் இருப்பு 64.84 டி.எம்.சி,யாக உள்ளது. இன்று காலை 11 மணியளவில் 100 அடியை எட்டியது என பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். காலை 8 மணி நிலவரப்படி, அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 6 ஆயிரத்து 512 கன அடியில் இருந்து 8 ஆயிரத்து 111 கன அடியாக அதிகரித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்