3 மாவட்டங்களில் மிரட்டிய மழை........மகிழ்ச்சியில் குதுகளித்த மக்கள்...!!!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியுள்ளது.இதனால் மக்கள் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் குமரி, நாகை, தர்மபுரி மாவட்டங்களில் நல்ல மழை

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியுள்ளது.இதனால் மக்கள் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் குமரி, நாகை, தர்மபுரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ள நிலையில், சேலத்தில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.இந்நிலையில் சேலத்தில் வெயில் வாட்டிய நிலையில்  இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர்.

unknown node

மேலும் தர்மபுரிமாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் நேற்றுமாலை கனமழை பெய்தது. சுமரர் ஒருமணி நேரம் இந்தமழை நீடித்தது. நல்லாம்பள்ளி, மதிகோண்பாளையம், அன்னசாகரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் அங்கு  சாலைகளில் மழைநீருடன் கால்வாய் நீரும் கலந்து ஓடியது. இதில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

unknown node

இதற்கிடையே நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.

unknown node

இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் மற்றும் குடிநீருக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும் என பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.3 மாவட்டங்களிலும்  மிரட்டிய மழையால் மக்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

DINASUVADU