அரசு மேல்நிலைப்பள்ளியை மது அருந்தும் கூடாரமாக குடிகாரர்கள் பயன்படுத்தி வருவதாகப் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் சோமனஅள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளி அருகே மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது இதனால் குடி பிரியர்கள் பள்ளி வளாகத்தை மது அருந்தும் கூடாரமாக மாற்றி அதனை பயன்படுத்தி வருவதாக பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் அச்சதுடன் , ஆத்திரத்துடனும் குற்றஞ்சாட்டியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட சோமனஅள்ளியில் இந்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இருநூறு மீட்டர் தொலைவில் […]
3 கல்லூரி மாணவிகள் பலியான தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி அரசு அனுப்பிய மனுவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பியனுப்பினார். 2000 ஆம் ஆண்டில் பிப்ரவரி 2 ஆம் தேதி, கோவையைச் சேர்ந்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் சுற்றுலா சென்ற பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிரோடு தீயில் கருகி இறந்தனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் […]
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியுள்ளது.இதனால் மக்கள் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் குமரி, நாகை, தர்மபுரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ள நிலையில், சேலத்தில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.இந்நிலையில் சேலத்தில் வெயில் வாட்டிய நிலையில் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். மேலும் தர்மபுரிமாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் நேற்றுமாலை கனமழை பெய்தது. சுமரர் ஒருமணி நேரம் […]