கோடைகாலம் வந்து விட்டாலே நம் மனது மற்றும் உடல் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.கோடையை சமாளிக்க ஒரே வழி குடும்பத்தார் அனைவருடனும் சுற்றுலா செல்வது. இந்த சுற்றுலாவில் நமது ஒரே நோக்கம் அதிக இடங்களுக்கு சென்று அதிக நேரம் செலவிட வேண்டும் என்பது தான் அந்த வகையில் நாம் பார்ப்பதற்கு சிறந்த சுற்றுலா தளங்கள் குமரி மாவட்டத்திலும் ஏராளமானவைகள் காணப்படுகிறது. கன்னியாகுமரி ஒரே மாவட்டத்தில் குறைந்த செலவிலும் அதிக இடங்களை பார்க்கலாம்.இது பற்றி ஒரு தொகுப்பு. பகவதி […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளையும் டிச..,24 தேதியும் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் ஸ்தாணுமாலையன் கோவில் மார்கழி திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு நாளையும் மற்றும் கிறிஸ்துமஸ் ஈவ் விழாவிற்காக திங்கட்கிழமையும் உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியுள்ளது.இதனால் மக்கள் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் குமரி, நாகை, தர்மபுரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ள நிலையில், சேலத்தில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.இந்நிலையில் சேலத்தில் வெயில் வாட்டிய நிலையில் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். மேலும் தர்மபுரிமாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் நேற்றுமாலை கனமழை பெய்தது. சுமரர் ஒருமணி நேரம் […]
2 மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் இன்றிரவு 10 மணி வரை கடல் சீற்றமாக காணப்படும் மேலும் கடல் சீற்றமாக இருக்கும் நேரத்தில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்தார். மேலும் வடகிழக்கு பருவமழை எவ்வளவு அதிகமாக வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும் எதிர்கொள்ள தயார் நிலையில் […]
கன்னியாகுமரி கடலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கரைத்தார். கடந்த சில தினங்களுக்கு முன் முன்னாள் பிரதமர் வாய்பாயின் அஸ்தி எல்லா மாநிலங்களின் பாஜக தலைவர்களுக்கு பாஜக தலைமை அலுவலகத்தில் டெல்லியில் கொடுக்கப்பட்டது இதனை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் பெற்றுக்கொண்டார்.அதன்படி தமிழக பாஜக அலுவலகமான சென்னை கமலாயத்தில் அஸ்தி வைக்கப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று 6 இடங்களில் கரைக்கப்படும் என பாஜக தலைவர் தமிழிசை […]
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்பட சில முக்கிய பஸ் நிலையங்களில் அம்மா குடிநீர் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டத்தை பொறுத்தவரையில் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் காந்தி மைதானத்தில் செயல்பட்டு வந்தது.பொதுமக்களும் ஆர்வமுடன் குடிநீர் பாட்டிலை வாங்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களாக இங்கு அம்மா குடிநீர் விற்பனை நிலையம் பூட்டியே கிடந்தது. கடும் கோடை வெயில் கொளுத்திய நேரங்களிலும் இந்த விற்பனை நிலையம் திறக்கப்படவில்லை இது தொடர்பாக நாளிதழ்களில் படத்துடன் செய்தி […]
தூத்துக்குடியில் கடந்த 22ம்தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் பதற்றமான நிலை நிலவியது. நெல்லை, குமரி, மதுரை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். இன்னும் தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் 3 வித வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் […]
இரணியல் அருகே கட்டிமாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட மூலச்சன் விளையில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு சரியாக தண்ணீர் வர வில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக குழாய்கள் ஆங்காங்கே உடைந்து, குடிநீர் வராததால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் முறையாக குடிநீர் வரவில்லை. கடந்த 5 மாதங்களாக இந்த நிலை தான் நீடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை மூலச்சன்விளையை சேர்ந்த ஏராளமான பெண்கள், காலி குடங்களுடன் அந்த பகுதியில் திரண்டு […]
குமரி மாவட்டத்தில் வடசேரி பேருந்துநிலையம் பகுதியில் கைகுழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதாக கலெக்டருக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கும் புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி குமுதா தலைமையில் ஆள்கடத்தல் தடுப்புபிரிவு சப்இன்ஸ்பெக்டர் மெர்சி மற்றும் ஊழியர்கள், வடசேரி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அனில்குமார் ஆகியோர் வடசேரி பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 6 பெண்கள் குழந்தைகளுடன் பிச்சை எடுப்பது தெரியவந்தது. பிடிப்பட்ட 6 பெண்களையும் அதிகாரிகள், இனி இதுபோன்று குழந்தைகள் வைத்து பிச்சை […]
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மாணவ ,மாணவியர்களால் எழுதப்பட்டு அதற்கான முடிவுகள் சமிபத்தில் வெளியானது. இதில் வெள்ளிச்சந்தை அருகேயுள்ள அருணாச்சலா பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியை சேர்ந்த சிவதேவ், ஏஞ்ஜெலின் ஜெனிட்டா, கார்த்திகா, மதன், அட்சை பகவத், நித்ய பாரதி, சிர்பின் லால் ஆகியோர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.தேர்வு எழுதியவர்களில் 58 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
குமரி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், பள்ளிகளின் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்த வேண்டும். கட்டாய கல்வி சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் அடிப்படை கட்டுமானம், தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதுடன், அடிப்படை கட்டுமான வசதிகளை உயர்த்த […]
நாகர்கோவில் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதச் சம்பளம் வழங்காத ஒப்பந்ததாரரை கண்டித்தும், இஎஸ்ஐ, பி.எப் முறையாக அமல்படுத்தாத ஒப்பந்தாரரை கண்டித்தும், இதுபோன்ற ஒப்பந்த தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத் தொடர்பு சங்கம் ஆகியன இணைந்து, ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நாகர்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடத்தினார்கள்.
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கோட்டார் சமூக சேவை இயக்கம் சார்பில் இயங்கும் சைல்டு லைன் 1098 அமைப்பு சார்பில், நாகர்கோவில் பொருட்காட்சி திடலில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர் மற்றும் குழந்தைகள் பங்கேற்று கையெழுத்திட்டனர். அவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டன. வெளி இடங்களுக்கு அழைத்து செல்லும் போதும், பள்ளி மற்றும் பிற இடங்களுக்கு செல்லும் போதும் குழந்தைகளை கவனமாக பார்த்துக் […]
கருங்கல்:போலீசார் நேற்று காலை குமரி மாவட்ட மணல் கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையில் தனிப்படை கருங்கல் கருமாவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனையிட முயன்றனர். உடனடியாக லாரியில் இருந்து டிரைவர், கிளீனர் இருவரும் இறங்கி தப்பியோட முயன்றனர். தனிப்படையினர் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். லாரியில், ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது. ஆவணங்களை சோதனையிட்ட போது திருச்சி மாவட்ட அரசு குவாரியில் இருந்து […]
குளச்சல்: ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு நேற்று நாகர்கோவில் அருகே நாவல்காடு ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். தூய்மை படுத்தும் பணியை ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி தலைவர் ஜேம்ஸ் பிரேம்குமார் துவக்கி வைத்தார்.தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜோபிரகாஷ், பைரவி பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் சோபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் தூய்மை பணியை செய்வதற்கு முன்னதாக மாணவர்கள் ‘தூய்மையே சேவை’என்னும் பசுமை உறுதிமொழி […]
குளச்சல் : குளச்சல் அண்ணாசிலை சந்திப்பில்குளச்சல் நகர தி.மு.க. சார்பில் செயலாளர் நசீர் தலைமையில் எச்.ராஜா உருவ பொம்மை எரிக்கும் போராட்டம் நடந்தது. இதில், முன்னாள் கவுன்சிலர் சாதிக், கிளை செயலாளர் சாதிக், ரீத்தாபுரம் பேரூர் செயலாளர் கோபாலதாஸ், குருந்தன்கோடு ஒன்றிய பிரதிநிதி கிறிஸ்டோபர் ஜெகன், மாவட்ட மீனவர் அணி துணை செயலாளர் மரிய ரூபன் மற்றும் வக்கீல் முருகன், ஆல்பின், கண்ணன், சாகுல் அமீது, மனோ, ஷாஜகான், சேக் முகம்மது, நூர்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.எரிக்கப்பட்ட உருவ […]
திருவனந்தபுரம்: அன்ஷாத் இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மடத்தரை பகுதியை சேர்ந்தவர். இவரது மனைவி ஷம்னா. நிறைமாத கர்ப்பிணியான இவரை பிரசவத்துக்காக 2 நாட்களுக்கு முன் காலை திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள எஸ்ஏடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் வார்டுக்கு சென்ற அவர் திடீரென மாயமானார். இது தொடர்பாக மருத்துவ கல்லூரி போலீசாரும் தேடி வந்தனர்.பின்னர் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து ரகளையில் ஈடுபட்டனர்.திடிரென அவரது கணவர் அன்ஷாத்துக்கு நேற்றுமுன் தினம் மாலை ஷம்னாவின் போனில் இருந்து […]
குலசேகரம்:வசந்தகுமாரி இவர் திருவட்டாரை அடுத்துள்ள மாத்தூர் அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் .17.5 சென்ட் இடம் இவருக்கு சொந்தமாக இரணியல் பகுதியில் உள்ளது. இந்த இடத்தை கடந்த 2013ம் ஆண்டு நாகர்கோவில், வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த சசிகுமார் என்பருக்கு ரூ.54 லட்சம் தொகை பேசி விற்பனை செய்துள்ளாராம்.அப்போது 29 லட்சம் பணத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் ரூ.25 லட்சத்தை கொடுக்காமல் சசிகுமார் தாமதம் செய்துள்ளார். இந்தநிலையில் பாக்கி பணத்தை வசந்தகுமாரி நேற்று முன்தினம் சசிகுமாரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் […]
அஞ்சுகிராமம்: முத்துகிருஷ்ணன் மகன் மணிகண்டன் இவர் அஞ்சுகிராமம் அருகே குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர். இவர் அதே ஊரை சேர்ந்த 2 நண்பர்களுடன் ஒரே பைக்கில் ராஜாவூர் – குமாரபுரம் தோப்பூர் சாலையில் வந்து கொண்டு இருந்தனர். குமாரபுரம் தோப்பூர் வரும்போது பைக் நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதியது.இதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆட்டோவில் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக மணிகண்டனை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர் […]
நாகர்கோவில்:முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து, நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று காலை கலெக்டர் பிரசாந்த் வடநேரே அரசின் சாதனைகள் குறித்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை,துவங்கி வைத்தார். எம்.பி.விஜயகுமார் குத்து விளக்கேற்றினார். இந்த கண்காட்சியில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டம், கல்வி உதவி தொகைகள், மகப்பேறு நிதி உதவி, திருமண நிதி உதவி போன்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் […]