சென்னை to பம்பை; நவ.17 முதல் சிறப்பு பேருந்துகள் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை - பம்பை இடையே நவம்பர் 17-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவம்பர் 17-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவம்பர் 17-ம் தேதி முதல் சிறப்பு விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் ஜனவரி 18-ஆம் தேதி வரை இயக்ககப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

பேருந்துகளில் இருக்ககைகளை www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மறுநாள் நடை திறக்கப்படுகிறது. இதையடுத்து சபரிமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜைக்கான விழா தொடங்குகிறது.

இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த சமயத்தில் கார்த்திகை மாதம் முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து 48 நாட்கள் விரோதம் எடுத்து மலைக்கு சென்று வருவார்கள். இந்த நிலையில், சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவ.17-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழநாடு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.