மாநகர போக்குவரத்து கழகப் பேருந்துகளில், பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டுமென நிர்பந்தம் செய்யக்கூடாது என நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. மாநகர பேருந்துகளில் ஏறும்போதே பயணச்சீட்டிற்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டுமென்ற வாக்குவாதத்தில் நடத்துனர்கள் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, மா.போ.கழகப் பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டுமென நிர்பந்தம் செய்யக்கூடாது. அவர்கள் […]
சென்னையில் முதியோர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்க வரும் 21ம் தேதி டோக்கன் வழங்கப்படும் என அறிவிப்பு. மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யும்போது மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் குறித்து போக்குவரத்து கழக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் வரும் 21ம் தேதி முதல் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்படும் என்று மாநகர போக்குவரத்து […]
1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. தமிழகத்தில் புதிதாக 1,000 பேருந்துகளை வாங்க ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் தவிர்த்து இதர கோட்டங்களுக்கு புதிதாக 1000 பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பேருந்துக்கு தலா ரூ.42 லட்சம் என மதிப்பீடு செய்து மொத்தம் ரூ.420 கோடி […]
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு. திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. பக்தர்களின் வருகையை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்க தயாராக உள்ளதாகவும் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை தீபத் திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6ம் தேதி தீபத்திருவிழா […]
சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவம்பர் 17-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம். சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவம்பர் 17-ம் தேதி முதல் சிறப்பு விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் ஜனவரி 18-ஆம் தேதி வரை இயக்ககப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பேருந்துகளில் இருக்ககைகளை www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கேரளாவில் […]
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது குறித்து வரும் 13ம் தேதி போக்குவரத்துறை ஆலோசனை. தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (மே 13ம் தேதி) நடைபெறும் என்று போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. ஆட்டோ கட்டணம் மறு நிர்ணயம் தொடர்பாக போக்குவரத்து ஆணையர் தலைமையில், ஆலோசனை நடைபெறும் என போக்குவரத்துறை இணை ஆணையர் அறிவித்துள்ளார். தொழிற்சங்கம், அரசு அதிகாரிகள் கொண்ட குழுவுடன் ஆலோசனை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2013-ஆம் […]
தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்த தற்போது வாய்ப்பில்லை என்று அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் தகவல். நாட்டில் மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்த பட்ட போதிலும், தமிழ்நாட்டில் உயர்த்தப்படவில்லை, அதற்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார். எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பாக வழிகாட்டுதலை உருவாக்க அரசு ஆலோசனை செய்து வருகிறது. போக்குவரத்துத்துறைக்கு தனி கட்டுப்பாட்டு அறை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண தமிழக சட்டமன்ற […]
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்கீடு செய்ய போக்குவரத்து துறை உத்தரவு. தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு படுக்கை எண்1LB மற்றும் 4LB ஒதுக்கீடு செய்ய தமிழக போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், மேலாண் இயக்குநர் உத்தரவின்படி போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட […]
தமிழக அரசு போக்குவரத்து துறையை சீர்திருத்த இந்திய மதிப்பில் ரூ.1600 கோடி ரூபாயை ஒதுக்க உள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்தியா வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த நிலையில் இன்று டெல்லியில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தமிழகத்தில் அரசு பேருந்து துறையை சீர்திருத்த […]
சென்னை தலைமை செயலகத்தில் ரூ.154 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார். இதில் 15 பேருந்துகள் கிளாசிக் எனப்படும் கழிவறை வசதி கொண்டவை ஆகும்.போக்குவரத்து கழகங்கள் வாரியாக சென்னை 235, விரைவு போக்குவரத்து கழகம் – 118, விழுப்புரம் -18, சேலம் – 60, கோவை – 16, கும்பகோணம் – 25, மதுரை – 14, நெல்லை – 14 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.