வந்தாரை வாழவைக்கும் சென்னைஎன தமிழகம் மட்டுமல்லாது உலக மக்களில் சென்னையை நன்கு அறிந்தவர்கள் கூட சொல்லி விடுவார்கள். அவ்வளவு வேகமாக இயங்கி வருகிறது சென்னை.
இவ்வளவு பெருமை மிக்க சென்னையை தற்போது வரை தமிழகத்தில் பெரும்பாலானோர்மெட்ராஸ்என்று தான் அழைத்து வருகின்றனர். தமிழ்நாட்டை தாண்டி வடமாநிலங்களுக்கு நாம் செல்கையில் அவர்கள் தமிழர்களைமதராஸிஎனவே தற்போது வரை அடையாளப்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு சென்னை நம் வாழ்வில் ஓர் அங்கம் வகிக்கிறது.
unknown nodeசென்னைஎன்ற பெயர்1996இல் வைக்க பட்டாலும்,மெட்ராஸ்என்கிற பெயர் எப்படி வந்தது என ஒரு சின்ன பிளாஷ்பேக்கில் பார்ப்போம். அந்த பிளாஸ்பேக்கில்இரண்டு கதைகள்உள்ளன
அதில் முதலாவதாக கூறப்படுவது, சென்னையில் முதலில்மீனவர்களும், கத்தோலிக்க பாதிரியார்களும்இருந்து வந்த காலகட்டம் அது. அப்போது கத்தோலிக்க மக்களின்தலையாரிஎன அழைக்கப்படுபவரின் மகன் பெயர்மதராசன். இதனால் தான் வசிக்கும் ஊரின் பெயருக்கு தனது மகனின் பெயரை வைக்க எண்ணிமதராசபட்டினம்என வைத்ததாக ஒரு கூற்றும்,
unknown nodeஇன்னொர் கதையாக , தற்போதையசாந்த்தோம்பகுதியில்போர்ச்சுக்காரர்கள்வசித்து வந்தனர். அங்கு ஓர் செல்வாக்கு மிக்கஅழகிய பெண்வசித்து வந்தார் அவள் பெயர்மாத்ரா. இவள் தான்பிரான்சிஸ் டேவின் காதலி. ஆதலால் தனது காதலியின் நினைவாகமதராஸ்என பெயர் சூடியதாகவும் கூறப்படுகிறது.
unknown nodeஇது போக இன்னோர் வரலாறு என்னவெனில், சென்னைஎக்மோர்அந்த நேரத்தில் பெரிய ஆறு, அந்த ஆறுக்கும்கூவம்ஆறுக்கும் இடையில் உள்ள பகுதிசந்திரகிரி ராஜாவம்சத்தின் வசம் இருந்தது. அப்போது அந்த பகுதியை சந்திரகிரி ராஜா அரசின் கீழ் ஆண்டு வந்த நாயக்கர்தான்தர்மாலா சகோதரர்கள். இவர்களிடம் இடத்தை வாங்க பேரம் பேசப்பட்டது. அவர்கள் இடத்தை தருகிறோம். ஆனால், எங்கள் தந்தைசென்னப்ப நாயக்கரின்பெயரை வைக்க வேண்டும் என கூறினார். அதனால் அந்த பகுதியை மட்டும்சென்னா பட்டணம்என அழைத்தனர்.
பிறகு தான் இந்த இரு பகுதிகளும் ஒன்று சேர்க்கபட்டு,மதராஸ்பட்டினம்என அழைக்கப்பட்டது. அதனை வெள்ளைக்காரர்கள்மெட்ராஸ்என அழைக்க தொடங்கினர்.