#BREAKING: கடற்கரைகளுக்கு செல்ல நாளை முதல் தடை – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

The Chennai Corporation has announced that the public will be banned from the Chennai Marina Beach from tomorrow.

சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு.

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக, நாளை முதல் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மறு உத்தரவு வரும்வரை கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், பிரத்தியேக நடைபாதையில் செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கபடுகிறது என்றும் நடைப்பயிற்சி செல்லும் பொதுமக்கள் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது எனவும் சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.