மூன்றாவது அலையின் போது கண்டறியப்பட்ட BA.2 ஐ விட BA.12 10 மடங்கு ஆபத்தானது என ஆய்வில் தகவல். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பீகாரின் மாநிலம், பாட்னாவில் ஓமைக்ரான் வைரஸின் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு […]
ஏற்கனவே உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் கடந்த இரு வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அவ்வப்போது கொரோனாவின் புதிய வகை மாறுபாடுகளும் அங்கங்கு கண்டறியப்பட்டு மக்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே ஓமைக்ரானின் BA.1, BA.2, BA.1.1, A.3 ஆகிய மாறுபாடுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்பொழுதும் ஓமைக்ரான் வைரஸின் புதிய இரு மாறுபாடுகள் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. BA.4 மற்றும் BA.5 மாறுபாடுகளாகிய இந்த புதிய […]
ஓமைக்ரானை எதிர்த்து போராட பூஸ்டர் டோஸ் போடுவது அவசியம் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து வந்தாலும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளிலும் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) நடத்திய […]
வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் திறந்து தான் உள்ளது. அங்கு மக்கள் வந்து தான் செல்கின்றனர். எனவே கொரோனா கட்டுப்பாடுகளுடன் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா உச்சத்தில் உள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 முதல் 6 வாரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 3-வது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை […]
இங்கிலாந்தில் புதிய வகை ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் தளர்த்தப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வருடமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டின் அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமைக்ரான் வகை வைரஸ் ஆனது இங்கிலாந்திலும் […]
ஓமைக்ரான் பாதிப்பு கடுமையானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் லேசானதாக இல்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் ஆனது அனைத்து நாடுகளிலும் தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதனையடுத்து ஒவ்வொரு நாடுகளும் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீப நாட்களாக உச்சத்தில் காணப்படுகிறது. இதனால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் […]
நாட்டின் 28 மாவட்டங்களில் நோய் பாதிப்பு 10% சதவீதத்துக்கு மேல் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார். முதலில் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸானது, தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பரவ தொடங்கியது. இதனால் ஒவ்வொரு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவிலும் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. […]
கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என்று ரிசல்ட் வந்துவிட்டால் வெளியில் வரலாம் என்று அமைச்சர் அறிவுறுத்தல். ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்காக சென்னையில் வேப்பேரியில் சித்தமருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஓமைக்ரான் கண்டறியப்பட்டு, அறிகுறி இல்லாமலிருந்தால் வீட்டில் மருத்துவர்கள் அறிவுரையுடன் சிகிச்சை பெறலாம் என்றார். 2 முறை கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என்று ரிசல்ட் வந்துவிட்டால் வெளியில் வரலாம் என்றும் […]
கொரோனா பரவல் எதிரொலியாக, ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவு நிறுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ், தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை தடிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]
ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை முதலில் தென்னாப்பிரிக்காவில்கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸானது தற்போது அனைத்து நாடுகளிலும் பரவி வரும் நிலையில், இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் ஓமைக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவத் […]
போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் கடிதம். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நேற்று ஒரே நாளில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை தெரிவித்திருந்தது. இதுமட்டுமில்லாமல், மறுபுறம் ஓமைக்ரான் வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தற்போது வரை 118 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 98 பேர் குணமடைந்தும், 20 பேர் […]
தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் இணைந்து 3வது அலையாக பரவுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, 15 வயதை தாண்டிய மாணவர்களுக்கு நாளை தடுப்பூசி போடும் பணியை முதல்வர் தொடங்கி வைக்கிறார். தடுப்பூசி போடாத அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சென்னையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் 5 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர். தமிழகம் முழுவதும் 86.22% பொதுமக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 58.82% பொதுமக்களுக்கு […]
சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு. ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக, நாளை முதல் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மறு உத்தரவு வரும்வரை கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், பிரத்தியேக நடைபாதையில் செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கபடுகிறது என்றும் நடைப்பயிற்சி செல்லும் பொதுமக்கள் மெரினா […]
முதலமைச்சர் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டு. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், அனைவரும் நோய்நொடியின்றி வாழ வேண்டியும், ஓமைக்ரான் மற்றும் கொரோனா இல்லாத உலகமாக மாற வேண்டும் என மீனாட்சி அம்மனை குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்துள்ளோம். கொரோனா பரவலை முன்பு அதிமுக அரசு எப்படி […]
தமிழகத்தில் ஜன.10-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றும் வேகமாகப் பரவி வருகிறது. இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சமுதாய, கலாச்சார மற்றும் […]
சென்னையில் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 34 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு என தகவல். தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 44 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், மேலும் 74 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 34 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாகவும் தகவல் […]
தனியார் மருத்துவமனைகளிலும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்க அரசுகளுக்கு வலியுறுத்தல். இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஐ.சி.எம்.ஆர் சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், ஓமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைகளை அதிகரிக்க வலியுறுத்தியுள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் சற்று காலதாமதம் ஆவதால் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனைகளிலும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை […]
டெல்டா கொரோனாவுக்கு மாற்றாக தற்போது ஓமைக்ரான் பரவ தொடங்கியதாக மத்திய அரசு தகவல். இந்தியாவில் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை ஓமைக்ரனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் டெல்டா கொரோனாவுக்கு மாற்றாக தற்போது ஓமைக்ரான் பரவ தொடங்கியதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் சார்பாக பல்வேறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டு வரும் நிலையில். இந்த தகவலை கூறியுள்ளது. அதாவது, […]
மகாராஷ்டிராவில் ஓமைக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட 52 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் மகாராஷ்டிராவில் உயிரிழந்தார். மகாராஷ்டிராவின் பிப்ரி சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த 52 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்தார். கொரோனா வைரஸின் ஓமைக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட இந்த நபர் பிம்ப்ரி சின்ச்வாடில் உள்ள யஷ்வந்த்ராவ் சவுகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 52 வயதான இவர் சமீபத்தில் நைஜீரியாவிலிருந்து இந்தியா வந்துள்ளார். இந்தியாவில் ஓமைக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் இதுவே […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,154 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 268 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,48,15,682 ஆக உள்ளது. மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 961 ஆக உயர்வு. கடந்த 24 மணி நேரத்தில் 13,154 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 2,837 அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,48,15,682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் […]